Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    MAKARAM Guru Peyarchi Palan

மகர ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் மகர ராசிக்கு மூன்றாமிடமான மீன ராசியில் சஞ்சரித்து வரும் குருபகவான் அங்கிருந்து மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். கடந்த காலங்களில் இருந்து வந்த தடங்கல்கள் எல்லாம் விலகி விடும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெற முடியும். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பண வரவு சற்று சிறப்பாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. 4-ம் இடத்தில் அமரும் குரு சுமாரான பலன்களை தான் தருவார் என்பதால் கெடுதல் ஏதும் மகர ராசிக்கு இல்லை. 4-மிடம் குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் ஏதும் வராது. சுக ஸ்தான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் அமர்வதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம், எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தின் மீது விழுகிறது. நோய்களும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் நீங்கும். உடல் உபாதைகளை பெரியளவில் இல்லாவிட்டாலும் சிறியளவில் இருக்கும். வீட்டில் நிம்மதியும் சுகமும் குறையும், பெண்களால் சில பிரச்சனைகள் வரும். வாகன செலவுகள் அதிகரிக்கும். குடியிருக்கும் இடத்தில் இருந்து மாறி வெளியூர் சென்று வசிக்க நேரிடும், கல்வியில் தடை வரக் கூடும், உற்றார் உறவினர் பகை வரும். குரு மேஷ ராசியில் இருந்து 5ம் பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் உடல் உபாதைகள் விரைவில் குணமாகும், கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வீண் வம்புகள் கஷ்டத்தைத் தராது மனதில் ஏற்பட்டிற்கும் பயம் விலகும். வாழ்க்கைத்துணை மூலமாக தனவரவு ஏற்படும். மேஷத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பத்தாம் பாவத்தை பார்ப்பதால் முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி பெறும் உத்தியோகத்தில பதவி உயர்வு கிடைக்கும். மேஷ ராசியில் இருந்து 9ம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிடையே நெருக்கும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாலித்தினருடன் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. சுற்று வட்டாரத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடைய துவங்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆராய்ந்து செயல்படும் திறன் ஓங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். வாகனம் வாங்கும் எண்ணம் வரும். பிரபலங்களின் தொடர்பு நன்மையை தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சின்னச், சின்ன சண்டை, சச்சரவுகள் வந்து போகும். குடும்ப விவகாரங்களில் நிதானமாக செயல்படவும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல படியாக நடைபெறும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிடையே விவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உங்களுக்கு 2ல் சனி சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4ல் ராகு, 10ல் கேது அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். 30.10.2023க்கு பிறகு 3-லும் கேது 9லும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதிகாரப்பதவி தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விட முயற்சியின் பெயரில் வெற்றி கிட்டும்.

பரிகாரம் : 48 நாட்கள் தொடர்ந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யவும்

( For Makaram : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Makaram (Capricorn) [Stars: Utradam 2,3,4, Thiruvonam 1,2,3,4 Avitam 1,2 quarters]

Born with luck and fame to be on top in life. People under this rasi mostly becomes famous by nature and they shine like stars in any field. Cinema, art, music, dance, politics, higher authorities in military, police and government sectors, sports, business magnets, many riches, social figures are main areas of interest in general. Medicine and technology also very well suits them if Saturn and Venus are good in horoscope. Always work/business keeps them busy and alive. They are able to create a live environment easily by observing and adopting situation and surroundings. Most of the qualities match with kataga rasi and makara rasi where they have commanding in nature. Always the trip will be more enjoyable and meaningful. Though there is no much divinity due to busy schedule for makara rasi, they keep the prayers in the heart and do their duties well. Committed to responsibilities and duties are very helpful in many cases to complete the allocated job.

Extraordinary abilities are cultivated by birth to makara rasi and they do miraculous achievements in any field. Patience, achievement, practical approach and security are their key words. Awards and rewards knock the door often. Most of them are blessed with a deep wisdom, understanding, stability and action from an early age. Many charity and organizations are run by makara rasi people who are ready to donate others. Self appraisal, self confidence, perfection, brave-heart, adventures, positive attitude, motivating others, public services are the greatest qualities. Healthy foods and regular exercises keep them alive until 90 years. No one can influence these people other than kataga rasi where they have their own strong will power and divine sense to defeat anything before affects. Lucky colours are indigo, maroon and white, stones are red coral, hessonites and pearl, and numbers are 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.